கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்துக்கு பிறகு துல்கர் சல்மான் தமிழில் நடித்துள்ள படம் ஹே சினாமிகா. இந்தப் படத்தை பிரபல நடன இயக்குநர் பிருந்தா இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைதாரி ஆகியோர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் துல்கர் சல்மான் பாடியுள்ள அச்சமில்லை என்ற பாடல் என்ற பாடல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க | தனுஷின் 'மாறன்' பட விடியோ போஸ்டர் வெளியானது
இந்தப் பாடலை கார்கி எழுதியுள்ளார். நக்சத்திரா நாகேஷ், மிர்ச்சி விஜய், கௌசிக், அபிசேக் குமார், பிரதீப் விஜயன், கோதண்ட ராமன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.