
புஷ்பா பட பாடல்கள் இந்திய அளவில் பிரபலமாகி வருகின்றன. குறிப்பாக கிரிக்கெட் வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஹர்திக் பாண்டியா புஷ்பா அல்லு அர்ஜுன் போன்று நடனமாடும் விடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக வங்கதேச நாட்டில் நடைபெறும் பி.பி.எல் எனப்படும் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் என்ற போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. அப்போது கோமில்லா விக்டேரியன்ஸ் மற்றும் ஃபார்ச்சுன் பரிசால் ஆகிய அணிகளுக்கு இடையோன போட்டிகள் நேற்று (ஜனவரி 26) நடைபெற்றது.
இதையும் படிக்க | ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் 'மாநகரம்' ஹிந்தி ரீமேக்
போட்டியின் போது ஃபார்ச்சுன் பரிசால் அணியின் சார்பாக பங்கேற்ற டுவைன் பிராவோ 18வது ஓவரில் மெஹிதுல் இஸ்லாம் என்பவரின் விக்கெட்டை வீழ்த்தினார். அதனைக் கொண்டாடும் விதமாக புஷ்பா ஸ்ரீவள்ளி பாடலில் அல்லு அர்ஜுன் நடனமாடுவது போல பிராவோ நடனமாடினார். இந்த விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
The Champion, @DJBravo47 channels his inner
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.