
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள யானை திரைப்படம் வெற்றி பெற வனிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அருண் விஜய்யின் யானை திரைப்படம் இன்று (ஜூலை 1) திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. ஹரி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் அருண் விஜய்யின் சகோதரியும் நடிகையுமான வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில், யானை படக்குழுவுக்கு வாழ்த்துகள். கடின உழைப்பும் விடா முயற்சியும் என்றும் தோற்காது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | ''வின்னர் 2 ஆம் பாகம் பிரம்மாண்டமாக இருக்கும்'' - பிரசாந்த் சுவாரசியத் தகவல்
யானை படத்தை இயக்கிய ஹரி வனிதாவின் தங்கை ப்ரீத்தா விஜயகுமாரின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகுமார் குடும்பத்துடன் வனிதா தொடர்பில்லை. இந்த நிலையில் யானை படத்துக்கு அவர் வாழ்த்து தெரிவித்திருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
யானை படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்க, சமுத்திரக்கனி, அம்மு அபிராமி, ராதிகா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
Wishing team #Yaanai all the very best … hard work & persevarance never fails pic.twitter.com/jBW0d0tvSi
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) July 1, 2022