ஆர்ஆர்ஆர் குறித்து மோசமாக விமர்சித்த ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி - கொதித்தெழுந்த தெலுங்கு ரசிகர்கள்

ஆஸ்கர் விருதுபெற்ற ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி ஆர்ஆர்ஆர் படம் குறித்து தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
ஆர்ஆர்ஆர் குறித்து மோசமாக விமர்சித்த ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி - கொதித்தெழுந்த தெலுங்கு ரசிகர்கள்

ஆஸ்கர் விருதுபெற்ற ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி ஆர்ஆர்ஆர் படம் குறித்து தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்று பின்னணியில் ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படம் கடந்த மார்ச் 24 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. 

கொமரம் பீம், அல்லுரி சீதாராம ராஜு என்ற சுதந்திர போராட்ட வீரர்களாக ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் நடித்திருந்தனர். இந்தப் படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தப் படம் ஓடிடியில் வெளியான பிறகு சில எதிர்மறை விமர்சனங்களையும் பெற்றுவருகின்றன. இந்த நிலையில் ட்விட்டர் பதிவர் ஒருவர், ஆர்ஆர்ஆர் என அழைக்கப்படும் குப்பைப் படத்தை 30 நிமிடங்கள் வரை பார்த்தேன் என்று பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஆஸ்கர் விருது பெற்ற ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி, தன் பாலின ஈர்ப்பாளர் பற்றிய கதை என்று பதிலளித்தார். அவரது பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. 

தெலுங்கு ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்துவருகின்றனர். இந்த நிலையில் பாகுபலி தயாரிப்பாளர் ஷோபு யர்லகடா தனது ட்விட்டர் பக்கத்தில் ரசூல் பூக்குட்டிக்கு அளித்த பதிலில், ஆர்ஆர்ஆர் தன் பாலின ஈர்ப்பாளர் பற்றிய படம் என நான் நினைக்கவில்லை. அப்படியே இருந்தாலும் அது தவறான விஷயமா? என்று குறிப்பிட்டிருந்தார். 

அவருக்கு பதிலளித்த ரசூல் பூக்குட்டி, முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். அப்படியே இருந்தாலும் அது தவறில்லை தான். நான் என் நண்பருக்கு பதிலளித்தேன். மேலும் பொதுவெளியில் பேசப்படுவதைத்தான் நானும் தெரிவித்திருந்தேன். இதனை நீங்கள் இவ்வளவு கவலைக்குரியதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று விளக்கமளித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com