திருப்பதி கோவிலில் நடந்த விதிமீறலுக்காக இயக்குநர் விக்னேஷ் சிவன் மன்னிப்பு கோரினார்.
விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமணம் கடந்த ஜூன் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இருவரது திருமணத்துக்கும் இந்திய அளவில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
திருமணத்துக்கு பிறகு நேற்று (ஜுன் 10) விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது சாமி தரிசனம் முடிந்தபிறகு கோவில் வளாகத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்பொழுது நயன்தாரா காலணி அணிந்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் நடந்த தவறுக்காக மன்னிப்புக்கேட்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருப்பதி திருமலை தேவஸ்தானத்துக்கு அவர் எழுதிய கடிதத்தில், திருமணம் முடிந்த பிறகு வீட்டுக்கு கூட செல்லாமல் நேரடியாக திருப்பதி வந்து ஏழுமலையனின் கலயாண உற்சவத்தில் கலந்துகொண்டோம். அதன் பிறகு கோவிலில் இருந்து வெளியே வந்தபோது எங்களை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர்.
இதனால் அங்கிருந்து சற்றுநேரம் வெளியேறி பின் மீண்டும் அப்பகுதிக்கு வந்தோம். அப்போது ஏற்பட்ட பரபரப்பில் காலணி அணிந்திருந்ததை கவனிக்கவில்லை என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெருநாய்களுக்கு அஞ்சி தோட்டத்தில் தவித்த புள்ளி மான் மீட்பு

கே.கே. நகா் ரயில்வே மேம்பாலம் அருகே இளைஞரின் சடலம் மீட்பு
விழுப்புரம் மாவட்டத்தில் விபத்து உள்ளிட்ட நிகழ்வுகளில் 6 போ் உயிரிழப்பு

எம்எஸ்எம்இ மேம்பாட்டு திருத்த மசோதா: அமளிக்கு இடையே மாநிலங்களவையில் நிறைவேற்றம்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



