மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாய் பல்லவி - ராணாவின் 'விராட பர்வம்' படத்தின் முதல் 4 நிமிட காட்சி வெளியானது

சாய் பல்லவி - ராணா நடித்துள்ள விராட பர்வம் படத்தின் முதல் 4 நிமிட காட்சி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. 

News image
Updated On :16 ஜூன் 2022, 1:06 pm

DIN

சாய் பல்லவி - ராணா நடித்துள்ள விராட பர்வம் படத்தின் முதல் 4 நிமிட காட்சி வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ராணாவுடன் சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள படம் விராட பர்வம். இந்த படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. இந்தப் படம் தெலங்கானா மாநிலம் வாராங்கல் பகுதியில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்தப் படம் வெண்ணிலா என்ற பெண்ணுக்கு ராவண்ணா என்ற நக்சல் இளைஞர் ஒருவருக்குமிடையே காதலை பேசுவதாக கூறப்படுகிறது.  இந்தப் படத்தில் பிரியாமணி நந்திதா தாஸ், நிவேதா பெத்துராஜ், நந்திதா தாஸ், நவீன் சந்திரா, ஈஸ்வரி ராவ், ராகுல் ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் முக்கிய வேடங்கலில் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை (ஜுன் 17) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் 4 நிமிட காட்சி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. முன்னதாக விஜய் ஆண்டனி நடித்த சைத்தான் படத்தின் முதல் நான்கு நிமிட காட்சி வெளியானது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படத்தை ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரிக்க, உடுகுல வேணு இந்தப்  படத்தை இயக்கியுள்ளார். 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.