
லைட் இயர் என்ற அனிமேஷன் படத்துக்கு 14 நாடுகளில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தி டிஸ்னி பிக்சர் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பான லைட் இயர் என்ற படம் நேற்று (ஜுன் 17) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. ஆங்குஸ் மேக்லேன் இயக்கியுள்ள இந்தப் படத்தை உலகமெங்கும் உள்ள குழந்தைகள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்த நிலையில் இந்தப் படத்துக்கு மலேசியா மற்றும் சில முஸ்லிம் நாடுகள் என 14 நாடுகளில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. காரணம் இந்த படத்தில் முத்தமிடும் காட்சிகள், தன்பாலின ஈர்ப்பாளர்களை ஆதரிக்கும் காட்சிகள் படத்தில் உள்ளதாம்.
இதையும் படிக்க | பாராட்டிற்கும் கிண்டலுக்கும் வித்தியாசம் தெரியாதா ? ஜெயிலர் சர்ச்சை பதிவு குறித்து சுரேஷ் காமாட்சி விளக்கம்
முஸ்லிம் நாடுகளில் தன் பாலின ஈர்ப்பு என்பது மத நம்பிக்கைக்கு எதிரானதாகும். மேலும் குற்றமாகவும் கருதப்படுகிறது. எனவே அந்தக் காட்சிகளை நீக்கினால் மட்டுமே படத்தை வெளியிட அனுமதிக்கப்படும் என அந்நாடுகள் தெரிவித்ததாகவும், அதற்கு படக்குழுவினர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த நாடுகளில் படம் வெளியாகவில்லை. அமெரிக்காவிலும் இத்தகைய காட்சிகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதாம்.