நடிகர் நகுல் ஸ்ருதி தம்பதிக்கு ஏற்கனவே அகிரா என்ற பெண் குழந்தையுள்ள நிலையில், தற்போது ஸ்ருதி மீண்டும் கர்ப்பமாக இருக்கிறாராம். இதனை நடிகர் நகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
நடிகர் நகுல் - ஸ்ருதிக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. தங்களது குழந்தைக்கு அகிரா என பெயரிட்டுள்ளனர். குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தனது மனைவி ஸ்ருதி தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், ஜுன் மாதம் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அறிவிக்கும் விதமாக வித்தியாசமான முறையில் மனைவி, மகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நகுல் அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
அந்தப் படங்களில் அவரது பெண் குழந்தை 'வருகிற ஜுன் 2022-ல் நான் மூத்த சகோதரியாகப் போகிறேன்' என்ற வாசகம் இடம்பெற்ற ஸ்லேட்டை வைத்திருக்கிறார்.
நடிகை தேவையானியின் இளைய சகோதரரான நகுல், இயக்குநர் ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். துவக்கத்தில் பருமானாக இருந்த நகுல், தனது உடலமைப்பை முற்றிலும் மாற்றிக்கொண்டு 'காதலில் விழுந்தேன்' படத்தில் கதாயகனாக நடித்தார். அந்தப் படம் அவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.
தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுவருகிறார். தற்போது 'எரியும் கண்ணாடி' மற்றும் 'வாஸ்கோடகாமா' என இரண்டு படங்கள் நகுல் நடிப்பில் வெளியாகவிருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய சவுத் இந்தியன் வங்கி!

சனந்த் நடிக்கும் ஹார்ட்டின் பட டிரைலர் வெளியீடு!

விஜய் அன்பளிப்பு! ரிக்ஷா தொழிலாளர்களுக்கு இலவச மழை கோட்டுகள்!

அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறங்குகிறாரா?
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



