திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

அதிரடி சண்டைக்காட்சியுடன் அறிமுகமாகும் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்: 'தி லெஜண்ட்' பட போஸ்டர்

சரவணா ஸ்டோர்ஸ சரவணன் நடிக்கும் தி லெஜண்ட் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :4 மார்ச் 2022, 11:51 am IST

தனது கடை விளம்பரங்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன். இவர் தற்போது ஜேடி - ஜெர்ரி என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில் 'தி லெஜண்ட்' படத்தில் நடித்து வருகிறார். 

இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சரவணனுக்கு ஜோடியாக ரித்திகா திவாரி என்பவர் நடிக்கிறார். மறைந்த நடிகர் விவேக் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். அனல் அரசு சண்டைப்பயிற்சி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். பட்டுக்கோட்டை பிரபாகரன் இந்தப் படத்துக்கு வசனம் எழுத, இந்தப் படத்துக்கு வைரமுத்து, கபிலன், பா.விஜய், சினேகன், கார்க்கி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். 

ராஜு சுந்தரம், பிருந்தா, தினேஷ் ஆகியோர் இந்தப் படத்தின் பாடல்களுக்கு நடன இயக்குநராக பணிபுரிந்துள்ளனர். தற்போது ஹாரிஸ் ஜெயராஜின் தெறிக்கும் இசையுடன் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.