மலையாளிகளின் ஆங்கில உச்சரிப்பு குறித்து பாடகர் பென்னி தயாள் விடியோ வெளியிட்டுள்ளார்.
'பாபா' படத்தில் இடம்பெற்ற மாயா மாயா பாடல் மூலம் பாடகராக அறிமுகமானவர் பென்னி தயாள். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையளம் கன்னடம், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.
19 இந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 3500 பாடல்கள் வரை பென்னி தயாள் பாடியுள்ளார். 'பை த பீப்பிள்' என்ற மலையாள படத்தில் நடிக்கவும் செய்துள்ளார். அடிப்படையில் மலையாளியான பென்னி தயாள் மலையாளரிகளின் ஆங்கில உச்சரிப்பு குறித்து விடியோ பகிர்ந்துள்ளார்.
அந்த விடியோவில் ஹோட்டல் என்ற வார்த்தையை ஹௌட்டல் என்றும், போஸ் என்ற வார்த்தையை பாஸ் என்றும் ஆட்டோவை, ஓட்டோ என்றும் ஜஸ்ட் என்ற வார்த்தையை ஜெஸ்ட் என்றும் உச்சரிப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு பகுதிகளாக இந்த விடியோவை இரண்டு பகுதிகளாக அவர் வெளியிட்டுள்ளார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.