பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

''தோழி ஐஸ்வர்யாவுக்கு...'': தனுஷின் ட்விட்டர் பதிவால் ரசிகர்கள் நெகிழ்ச்சி

தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பதிவு ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. 

News image
Updated On :17 மார்ச் 2022, 2:40 pm

DIN

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக தங்கள் சமூக வலைதளங்கள் மூலம் அறிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரின் பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இதுவரை எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. 

இருவரும் கணவன், மனைவியாக பிரிந்தாலும் நண்பர்களாக தொடர்வோம் என தங்களது பிரிவு அறிவிப்பில் தெரிவித்திருந்தனர். அதற்கேற்ப ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'பயணி' பாடலைப் பகிர்ந்த தனுஷ், ''தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அங்கித் திவாரி இசையமைத்துள்ள இந்தப் பாடலை தமிழில் அனிருத் பாடியுள்ளார். இந்தப் பாடலை நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக வெளியிட்டு தனது மகளுக்கு வாழ்த்து தெரிவித்துளளார். இந்தப் பாடல் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.