
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குநர் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'சாணிக்காயிதம்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 7 ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாம். இதுகுறித்து விரைவில் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'சாணிக் காயிதம்' திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'ராக்கி' திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதால், சாணிக்காயிதம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | ''எனக்கும் இரண்டு மகள்கள் இருக்காங்க'': 'மன்மத லீலை' பட விழாவில் வெங்கட் பிரபு விளக்கம்
இந்தப் படத்துக்க சாம் சிஎஸ் இசையமைக்கிறார். முதலில் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாக இருந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இந்தப் படத்திலிருந்து யுவன் விலக, அவருக்க பதிலாக சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்துக்கு யாமினி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...