நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

’வில் ஸ்மித்தை நிகழ்ச்சியிலிருந்து வெளியேறச் சொன்னோம்’: ஆஸ்கர் அகாதெமி

ஆஸ்கர் மேடையில் நகைச்சுவை நடிகரை அடித்தவுடன் வில் ஸ்மித்திடம் நிகழ்ச்சியைவிட்டு வெளியேறச் சொன்னோம் என ஆஸ்கர் அகாடமி விளக்கம் அளித்துள்ளது.

News image

சிறந்த நடிகருக்கான விருதை, 'கிங் ரிச்சர்ட்' என்ற திரைப்படத்திற்காக வென்ற நடிகர் வில் ஸ்மித்.

Updated On :1 பிப்ரவரி 2024, 2:20 pm IST

ஆஸ்கர் மேடையில் நகைச்சுவை நடிகரை அடித்தவுடன் வில் ஸ்மித்திடம் நிகழ்ச்சியைவிட்டு வெளியேறச் சொன்னோம் என ஆஸ்கர் அகாதெமி விளக்கம் அளித்துள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த மார்ச்-28 நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில் தனது மனைவி ஜாடா பிங்கெட் ஸ்மித்தைக் கிண்டலடித்த நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை மேடையில் ஏறி அறைந்தார் வில் ஸ்மித்.

அலோபீசியா பாதிப்பு காரணமாக தலைமுடி கொட்டி வந்ததால் மொட்டை அடித்திருந்தார் ஜாடா. இதுபற்றி பல பேட்டிகளில் அவர் கூறியுள்ளார். ஆனால் ஆஸ்கர் விருது விழா மேடையில், ஜி ஐ ஜேன் படத்தைக் குறிப்பிட்டு (1997-ல் வெளியான படம்) நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கிறிஸ் ராக், ஜாடாவைக் கிண்டலடித்தார். இதைக் கேட்டு கடுப்பான வில் ஸ்மித், மேடையிலேயே கிறிஸ் ராக்கை அறைந்து, இனிமேல் என் மனைவியின் பெயரை நீ கூறக்கூடாது என்று உரத்த குரலில் கூறினார். இதனால் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும், கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக  சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வில் ஸ்மித்துக்கு வழங்கப்பட்டது.

பின், நகைச்சுவை நடிகர்  கிறிஸ் ராக்கை தாக்கியதற்காக வில் ஸ்மித்  அவரிடம் மன்னிப்புக் கேட்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இந்நிலையில், வில் ஸ்மித்துக்கு எதிராக கண்டனத்தைப் பதிவு செய்ததுடன் விசாரணையை மேற்கொண்டு வரும் ஆஸ்கர் அகாதெமி மேடையில் நகைச்சுவை நடிகரை அடித்தவுடன் வில் ஸ்மித்திடம் நிகழ்ச்சியைவிட்டு வெளியேறச் சொன்னோம்.ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார்’ என விளக்கம் அளித்துள்ளது. 

வில் ஸ்மித் மீதான ஒழுங்கு விசாரணையின் முடிவில் அவருக்கு வழங்கப்பட்ட ஆஸ்கர் விருது திரும்பப் பெற வாய்ப்புள்ளது என பலரும் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.