கேஜிஎஃப் 2 (ஹிந்தி): வசூலில் புதிய சாதனை

பாலிவுட்டில் ரூ. 400 கோடியைத் தொட்ட 2-வது படம் என்கிற சாதனையை கேஜிஎஃப் 2 (ஹிந்தி) அடைந்துள்ளது.
கேஜிஎஃப் 2 (ஹிந்தி): வசூலில் புதிய சாதனை

பாலிவுட்டில் ரூ. 400 கோடியைத் தொட்ட 2-வது படம் என்கிற சாதனையை கேஜிஎஃப் 2 (ஹிந்தி) அடைந்துள்ளது.

ஹிந்தியில் இதுவரை எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் ஹிந்தியில் டப் செய்யப்பட்ட இரு தென்னிந்தியப் படங்கள் தான் இந்திய அளவில் ரூ. 400 கோடி வசூலை அடைந்துள்ளன. 

யஷ் நடிப்பில் 2018-ல் வெளியான கேஜிஎஃப் என்கிற கன்னடப் படம் இந்திய அளவில் கவனம் பெற்றது. மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார். கேஜிஎஃப் படத்தின் 2-ம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. யஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் போன்றோர் நடித்துள்ளார்கள். கேஜிஎஃப் 2 படம் கன்னடம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

2019-ல் ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராஃப் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கிய வார் படம், முதல் நாளன்று இந்தியாவில் ரூ. 51.60 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்தது. கேஜிஎஃப் 2 ஹிந்திப் பதிப்பு அதன் சாதனையை உடைத்து முதல் நாளன்று இந்தியாவில் ரூ. 53.95 கோடி வசூலித்து புதிய வரலாறு படைத்தது. கேஜிஎஃப் 2 படம் முதல் நாளன்று இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் ரூ. 134.5 கோடி வசூலித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. 

கேஜிஎஃப் 2 (ஹிந்தி) ஐந்து நாள்களில் இந்தியாவில் ரூ. 200 கோடி வசூலைத் தாண்டியது. பாகுபலி 2 (ஹிந்தி) படம் ஆறாவது நாளன்று தான் இந்தியாவில் இந்த இலக்கை எட்டியது. 

இதன் ஹிந்திப் பதிப்பு தற்போது புதிய சாதனையைப் படைத்துள்ளது.

இந்தியாவில் அதிகமாக வசூலித்த 2-வது ஹிந்திப் படம் என்கிற பெருமையைப் பெற்ற கேஜிஎஃப் 2, தற்போது ரூ. 400 கோடி வசூலை எட்டியுள்ளது. 

ஆமிர் கான் நடித்த டங்கல் படம் இந்தியாவில் ரூ. 387.38 கோடி வசூலித்தது. இதனைத் தாண்டி 2-ம் இடம் பிடித்தது கேஜிஎஃப் 2 (ஹிந்தி).

தற்போது இந்தியாவில் ரூ. 400 கோடி வசூலை எட்டிய 2-வது ஹிந்திப் படம் என்கிற மகத்தான சாதனையைப் படைத்துள்ளது கேஜிஎஃப் 2 (ஹிந்தி). இதையடுத்து, இந்தியாவில் அதிக வசூல் மற்றும் ரூ. 400 கோடியை அடைந்த ஹிந்திப் படங்களில் பாகுபலி 2, கேஜிஎஃப் 2 என இரு தென்னிந்தியப் படங்கள் உள்ளன. 

கேஜிஎஃப் 2 (ஹிந்தி): இந்திய வசூல்

2-வது நாள்: ரூ. 100 கோடி
4-வது நாள்: ரூ. 150 கோடி 
5-வது நாள்: ரூ. 200 கோடி 
7-வது நாள்: ரூ. 250 கோடி 
11-வது நாள்: ரூ. 300 கோடி
16-வது நாள்: ரூ. 350 கோடி
23-வது நாள்: ரூ. 400 கோடி 

மேலும் உலகளவில் நேற்று வரை கேஜிஎஃப் 2 படம் ரூ. 1100 கோடி வசூலை எட்டியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com