
நடிகர் விஜய்யின் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி 67 படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது. 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
முன்னதாக, இந்தப் படத்தில் காதல் காட்சிகள், பாடல்கள் எதுவும் இல்லாமல் கைதி படம் போன்று முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இருக்கும் என தகவல் வெளியாகியிருந்தது. காதல் காட்சிகள், பாடல்கள் இல்லாமல் வெளியாகும் முதல் விஜய் படமாக தளபதி 67 இருக்கப்போகிறது.
இதையும் படிக்க: தப்பித்தாரா உதயநிதி? கலகத் தலைவன் - திரைவிமர்சனம்
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பை 170 நாள்களுக்கு நடத்த லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருப்பதாகவும் அதன்பின் அடுத்தகட்ட பணிகளுக்காக 3 மாதம் வரை எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.