மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

ஜஸ்வர்யா ராஜேஷின் ‘டிரைவர் ஜமுனா’ வெளியீடு குறித்து தகவல்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள டிரைவர் ஜமுனா திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :8 நவம்பர் 2022, 7:12 am

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள டிரைவர் ஜமுனா திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

‘வத்திக்குச்சி' படத்தை இயக்கிய பி. கின்ஸிலின் இயக்கத்தில் நடிகை ஜஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் டிரைவர் ஜமுனா. ஐஸ்வர்யா ராஜேஷ் கார் ஓட்டுநராக நடித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை - ஜிப்ரான்.

சாலை பயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இப்படம் வருகிற நவம்பர் மாதம் திரைக்கு வரும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் இப்படம் வெளிவர இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.