
தல ரசிகரா? தளபதி ரசிகரா? என ரசிகர்களின் கேள்விக்கு துருவ் விக்ரம் பதிலளிக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
நடிகர் சீயான் விக்ரமின் மகனான துருவ் சமீபத்தில் கல்லூரி ஒன்றில் மாணவர்களுடன் உரையாடினார். அப்போது அவரிடம் நீங்கள் தல ரசிரா இல்லை தளபதி ரசிகரா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த துருவ் நான் தளபதி ரசிகன் என்றார். இந்த விடியோவை விஜய் ரசிகர்கள் அதிகம் பதிர்ந்து டிரெண்ட் செய்துவருகிறார்கள்.
இதையும் படிக்க | 'சர்தார்' டிரைலர் எப்போது? அறிவிப்பு
துருவ் சமீபத்தில் தனது தந்தை விக்ரமுடன் இணைந்து மகான் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதனையடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் துருவ் நடிப்பார் என்று தெரிகிறது. மாரி செல்வராஜ் தற்போது மாமன்னன் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். மாமன்னன் படத்துக்கு பிறகு துருவ் படம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Dhruv Vikram about @actorvijay Anna #Varisu pic.twitter.com/Pq3Mql44rz
— Gopakumar Parthan VJ (@Gopu_VJ) October 12, 2022