ரஜினியின் 'ராஜா சின்ன ரோஜா'வில் கார்டூன் கதாப்பாத்திரங்கள் உருவானது எப்படி தெரியுமா?

ரஜினியின் ராஜா சின்ன ரோஜா படத்தில் கார்டூன் கதாப்பாத்திரங்கள் உருவானது குறித்து ஏவிஎம் நிறுவனத்தின் தற்போதைய தயாரிப்பாளர் அருணா குகன் தெரிவித்துள்ளார். 
ரஜினியின் 'ராஜா சின்ன ரோஜா'வில் கார்டூன் கதாப்பாத்திரங்கள் உருவானது எப்படி தெரியுமா?

ரஜினியின் ராஜா சின்ன ரோஜா படத்தில் கார்டூன் கதாப்பாத்திரங்கள் உருவானது குறித்து ஏவிஎம் நிறுவனத்தின் தற்போதைய தயாரிப்பாளர் அருணா குகன் தெரிவித்துள்ளார். 

ஏவிஎம் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான படம் ராஜா சின்ன ரோஜா. எஸ்.பி.முத்துராமன் இயக்கிய படம் அப்போதைய குழந்தைகளைப் பெரிதும் கவர்ந்தது. இன்றும் இந்தப் படம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானால் குழந்தைகள் விரும்பி பார்க்கின்றனர். 

அந்த அளவுக்கு இந்தப் படத்தில் குழந்தைகளை மையப்படுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்தப் படத்தில் தான் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அனிமேஷன் காட்சிகள் இடம்பெற்றதாக கூறப்படுவதுண்டு. ராஜா சின்ன ரோஜாவோடு என்ற பாடலில் இந்த அனிமேஷன் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். 

இந்த நிலையில் இந்த அனிமேஷன் காட்சிகள் உருவான விதத்தை ஏவிஎம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அருணா குகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், மும்பையைச் சேர்ந்த கார்டூனிஸ்ட் ராம் மோகனிடம் 'ராஜா சின்ன ரோஜோவோடு காட்டுப்பக்கம்' வந்தானாம் பாடலுக்கு அனிமேட் பண்ணும்பட ஏவிஎம் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது. 

முதலில் ஒரு முழுப்பாடலுக்கும் அனிமேட் செய்யமுடியாது என அவர் மறுத்தார். பின்னர் அவரிடம் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் மிகவும் வேண்டிக்கேட்டுக்கொண்டார். பின்னர் சம்மதித்த ராம் மோகன், தனக்கு மூன்று மாதங்கள் தேவைப்படும் என்றும் முதலில் குழந்தைகளை வைத்து பாடல் படமாக்கப்பட்ட பின்னர் அனிமேட் செய்யலாம் என்றார். 

இந்தப் பாடலில் உள்ள காட்சிகளுக்காக 84,000 கார்டூன்கள் வரையப்பட்டது. ஒவ்வொரு காட்சியும் கையால் வரையப்பட்டது. கம்யூட்டர் கிராஃபிக்ஸ் பயன்படுத்தப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com