ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

பிரபல நடிகையின் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டதாக புகார்

நடிகை பார்வதி நாயர் தனது வீட்டில் லட்சக்கணக்கான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

News image
Updated On :20 அக்டோபர் 2022, 12:00 pm IST

நடிகை பார்வதி நாயர் தனது வீட்டில் லட்சக்கணக்கான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

தமிழில் என்னை அறிந்தால், உத்தம வில்லன், நிமிர் போன்ற படங்களில் நடித்தவர் மலையாள நடிகை பார்வதி நாயர். இவர் தற்போது வைபவுடன் இணைந்து ஆலம்பனா படத்தில் நாயகியாக நடித்துள்ளார். 

இவர் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்துவருகிறார். இவரது வீட்டில் இரண்டு ஆண்டுகளாக வேலை செய்தவர் ரூ.9 லட்சம் விலையுல்ல இரண்டு கைக்கடிகாரங்கள், 50 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப், செல்போன் போன்ற பொருட்களைத் திருடி சென்றதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தற்போது அவரது புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.