
இப்பொழுது மட்டும் உங்கள் நம்பிக்கை காயப்படாதா என நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை நேற்று (ஆகஸ்ட் 31) நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. மக்கள் விதவிதமான தோற்றங்களுடன் கூடிய விநாயகர் சிலைகளை வீட்டிற்கு வாங்கி வந்து வழிப்பட்டுவருகின்றனர்.

மக்களை ஈர்க்கும் வகையில் வித்தியாசமான தோற்றங்களில் விநாயகர் சிலை விற்கப்பட்டுவருகின்றன. 'ஆர்ஆர்ஆர்' பட ஜுனியர் என்டிஆர் தோற்றத்திலும், ராம்சரண் தோற்றத்திலும் விநாயகர் சிலைகள் விற்கப்படுகின்றன.

மேலும் 'புஷ்பா' பட அல்லு அர்ஜூன், 'கேஜிஎஃப்' யஷ், 'ஜெயிலர்' ரஜினிகாந்த் ஆகியோர் போன்று வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலகளும் விறபனைக்குவந்துள்ளன. இவை குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க | ஆர்யாவின் 'கேப்டன்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
இந்த நிலையில் நடிகர்களின் தோற்றங்களில் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைகளின் புகைப்படங்களைப் பகிர்ந்த நடிகர் பிரகாஷ் ராஜ், இது நம் நம்பிக்கைகளை புண்படுத்தாதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
Doesn’t these hurt our sentiments… #justasking pic.twitter.com/TgKzCBqIRw
— Prakash Raj (@prakashraaj) September 1, 2022