'கேஜிஎஃப்' பட பாதிப்பில், 6 தொடர் கொலைகளை செய்த இளைஞர் - அதிர்ச்சி சம்பவம்

மத்திய பிரதேசத்தை சார்ந்த இளைஞர் ஒருவர் கேஜிஎஃப் பட பாதிப்பில் 6 கொலைகளை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
'கேஜிஎஃப்' பட பாதிப்பில், 6 தொடர் கொலைகளை செய்த இளைஞர்  - அதிர்ச்சி சம்பவம்

மத்திய பிரதேசத்தை சார்ந்த இளைஞர் ஒருவர் கேஜிஎஃப் பட பாதிப்பில் 6 கொலைகளை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் சிவபிரசாத் கோவா, புனே ஆகிய பகுதிகளில் உணவகங்களில் பணிபுரிந்திருக்கிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன் வேலையில்லாத காரணத்தால் சிவ பிரசாத் சொந்த ஊர் திரும்பியிருக்கிறார். 

இந்த நிலையில் சாகர் மாவட்ட பகுதிகளில் இரவில் பொதுவெளிகளில் தூங்குபவர்களை குறி வைத்து கொலை செய்து அவர்களிடமிருந்து பணம், கைப்பேசி ஆகியவற்றை கொள்ளையடித்திருக்கிறார். குறிப்பாக இரவில் காவல் பணிகளில் ஈடுபடுபவர்களிடம் கொலைசெய்து அவர்களது பணத்தைக் கொள்ளையடித்திருக்கிறார். 

இந்த நிலையில் போபால் கஜூரி பகுதியில் உள்ள மார்பிள் கடையில் பணிபுரிந்துவந்த 22 வயதாகும் காவலாளி சோனு வர்மாவைக் கொலை செய்திருக்கிறார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சாகர் மாவட்ட காவல்துறையினர் சிவ பிரசாத்தை கைது செய்திருக்கின்றனர். 

சிசிடிவி காட்சியில் சோனு வர்மாவை சிவ பிரசாத் தொடர்ச்சியாக சாகும்வரை அடித்துக்கொலை செய்திருக்கிறார். இந்த சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் வைரலாகிவருகிறது. தொடர்ச்சியாக 5 நாள் இரவுகளில் சிவ பிரசாத் கொலை செய்திருக்கிறார். கல்யாண் லோதி, சாம்பு நாராயண் துபே, மங்கல் அரிவார் உள்ளிட்டோர சிவ பிரசாத்தால் கொலை செய்யப்பட்டவர்கள் எனத் தெரியவந்திருக்கிறது. 

விசாரணையில் சிவ பிரசாத் புனேவில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்தபோது உணவகத்தை சேர்ந்தவரை கொலை செய்ய முயன்றிருக்கிறார். இதனால் சில மாதங்கள் சிறையில் இருந்த சிவ பிரசாத் ஜாமீனில் வெளியே வந்திருக்கிரார். 

சிவ பிரசாத்திடம் நடத்திய விசாரணையில் சமூக வலைதளங்கள், யூடியூப் விடியோக்கள், கேஜிஎஃப் படம் ஆகியவற்றின் பாதிப்பில் அவர் தொடர் கொலையில் ஈடுபட்டதாக தெரிந்திருக்கிறார்.இந்த நிலையில் சிவ பிரசாத் தொடர் கொலை செய்ததற்கான முதன்மை காரணம் குறித்து விசாரித்துவருவதாக சாகர் நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com