விஜய் டிவி புகழ் ஓராண்டுக்கு முன்பாகவே சுயமரியாதை திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவி புகழுக்கும் கோவையைச் சேர்ந்த பென்ஸியா என்பவருக்கும் சமீபத்தில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இருவரும் வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமண புகைப்படங்களை புகழ் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இயக்குநரும் நடிகருமான சசிகுமார் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்.

இதையும் படிக்க | ''தொடர்ந்து இந்துக்களுக்காக போராடுவேன்'' - கனல் கண்ணன் அதிரடி

இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பாகவே புகழ், பென்ஸியாவை கோவை பெரியார் படிப்பகத்தில் பதிவு திருமணம் செய்துகொண்டிருக்கிறார். தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் இவர்களுக்கு திருமணத்தை நடத்திவைத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ். இவருக்காகவே அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் ஏராளம். தற்போது தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக சில படங்களில் நடிக்கத் துவங்கியிருக்கிறார்.
மேலும் ஜூ கீப்பர் என்ற படத்தில் தற்போது ஹீரோவாகவும் நடித்துவருகிறார்.
cook with comali பà¯à®à®´à¯ மதமறà¯à®ªà¯à®ªà¯ திரà¯à®®à®£à®®à¯ à®à¯à®¯à¯à®¤à¯à®³à¯à®³à®¾à®°à¯.
â நà¯à®°à¯ à®à®²à¯ (@neeraikalai) September 2, 2022
pic.twitter.com/yBA1MtSwYx
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










