
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக தனது கோரிக்கையை மறுத்ததற்கு நடிகர் கார்த்திக்கு விக்ரம் பதிலளித்துள்ளார்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வருகிற 30 ஆம் தேதி வெளியாகும் நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் முயற்சிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் , படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ள விக்ரம் படத்தின் விளம்பரத்திற்காக தஞ்சை செல்வதற்கு நடிகர் கார்த்திக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அதற்கு நடிகர் கார்த்தி, “இளவரசே உங்களுக்காக தஞ்சை முதல் லங்கை வரை சென்ற களைப்பே இன்னும் போகவில்லை. எனக்கு காய்ச்சல் அதனால் வரமுடியாது. விடியோ காலில் இளவரசியிடம் பேசி மன்னிப்புக் கேட்கிறேன். தயவு செய்து என்னை மன்னியுங்கள்” என நகைச்சுவையாக மறுத்திருந்தார்.
இந்நிலையில் கார்த்தியின் மறுப்பிற்கு நடிகர் விக்ரம் பதிலளித்துள்ளார். அதில் அவர், “சரி தான்.இளைப்பாறு நண்பா. ஓய்வெடுத்து நோய் நீங்கி குணமடைக. சில போர்களை தனியாக சென்று தான் வெல்ல வேண்டும். தஞ்சை சென்று நம் அன்பு படைகளை சந்தித்தே ஆகவேண்டும். வேறொரு தருணத்தில் உன்னை சந்திக்கிறேன் வந்தியத்தேவா" எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.