

பிரபல நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படங்களை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
ஜோக்கர் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். தொடர்ந்து சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ’ஆண் தேவதை’, ’ராமே ஆண்டாலும் ராவண ஆண்டாலும்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.
இதையும் படிக்க: நல்ல திரைப்படங்களை ரசிகர்கள் கைவிடக் கூடாது: நடிகர் கமல்
இந்நிலையில், சமீப காலமாக ரம்யா பாண்டியன் சமூக வலைதளங்களில் தன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
தற்போது, உள்ளாடை மட்டும் அணிந்தபடி கவர்ச்சியாக இரண்டு படங்களை வெளியிட்டுள்ளார்.
அவை வைரலாகி வருவதால் சில ரசிகர்கள், ‘அமைதியான குடும்பப் பெண் கதாபாத்திரங்களில் நடித்துவந்த ரம்யாவும் வாய்ப்புகள் குறைந்ததால் முகம் சுழிக்கும்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்’ என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.