
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
'என்ஜிகே' படத்துக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் 'நானே வருவேன்' படத்தில் தனுஷ் நாயகனாக நடித்துள்ளார்.
11 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: பொன்னியின் செல்வன் படக்குழுவினர் பயணம்
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், தற்போது ’நானே வருவேன்’ திரைப்படம் வருகிற செப்.29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
செப்.30 ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
We are extremely happy to announce that #NaaneVaruvean is releasing worldwide on September 29th! @dhanushkraja @selvaraghavan @thisisysr @theedittable @omdop @Rvijaimurugan @saregamasouth pic.twitter.com/nUMH73nVPr
— Kalaippuli S Thanu (@theVcreations) September 20, 2022