
விஜய்யின் தளபதி 67 படம் குறித்து நடிகை திரிஷா பேசும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா குந்தவையாக நடித்துள்ளார். இந்த நிலையில் இந்தப் படம் தொடர்பாக நடிகை திரிஷா படக்குழுவினருடன் பேட்டியளித்துவருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தொகுப்பாளர், 'நீங்கள் தளபதி 67 படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளதே?' என திரிஷாவிடம் கேட்டார். அதற்கு திரிஷா, இப்பொழுது என்னிடம் பொன்னியின் செல்வன் படம் குறித்து மட்டுமே பேச சொல்லியிருக்கிறார்கள் என்று பதிலளித்தார்.
இதையும் படிக்க | ‘மேனன்... படிச்சி வாங்குன பட்டமா?’- பதிலடி கொடுத்த ப்ளு சட்டை மாறன்!
இதனையடுத்து திரிஷா தளபதி 67 படத்தில் நடிப்பதை மறுக்கவில்லை என்பதால் விஜய் ரசிகர்கள் உற்சாகமாகமடைந்துள்ளனர்.
கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி ஆகிய 4 படங்களில் விஜய் - திரிஷா இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். இதில் கில்லி, திருப்பாச்சி ஆகிய படங்கள் பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன. இந்த வரிசையில் தளபதி 67 இடம்பெறுமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.
It's happening Actress @trishtrashers will be a part of the Thalapathy67 cast Beast Varisu PonniyinSelvan1 @actorvijay pic.twitter.com/0fEPeqbM1f
— #Thalapathy67 (@TheVIJAY67Film) September 19, 2022