எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணி ரத்னம்.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னமும் குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி. பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 அன்று வெளியாகவுள்ளது.
பொன்னியின் படம் வெளிவருவதையொட்டி ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்துகொண்டார்கள். இந்த விழாவில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பேசியதாவது:
தெலுங்குத் திரைத்துறையில் பணிபுரிய ஆரம்பித்து 38 வருடங்கள் ஆகிவிட்டன. என்னுடைய அடித்தளங்களில் தெலுங்குப் பட இசையும் ஒன்று. பொன்னியின் செல்வன் படம் பார்த்த பிறகு நெட்பிளிக்ஸ், பிரைம் ஓடிடிக்களில் உள்ள வெளிநாட்டு இணையத் தொடர்களைப் பார்ப்பதை நிறுத்தி விட்டேன். ஏனெனில் இது நன்றாக உள்ளது. நம் கலாசாரம், நம் ரத்தம், நம் முகம். அனைவருக்கும் நன்றி. என்னுடைய அமெரிக்க இசைக் கச்சேரிகளுக்கு வந்த தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது - நேரலை!

ஓடிடியில் வெளியானது உயிர் திரைப்படம்!

உதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!
உதயநிதி கைது; தவெக அரசின் கோழைத்தனம்: கனிமொழி கண்டனம்
விடியோக்கள்

உதயநிதி ஸ்டாலின் கைது! பரபரப்பான நிமிடங்கள்! | TVK | DMK



