
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரபல இயக்குநரின் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துள்ளார்.
மயக்கம் என்ன படத்துக்கு பிறகு செல்வராகவன் - தனுஷ் கூட்டணி இணைந்துள்ள படம் நானே வருவேன். இந்தப் படத்தில் இந்துஜா, எல்லி ஏவிஆர்ராம், பிரபு, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் செல்வராகவனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரிப்பில் உருவான இப்படம் நாளை செப்.29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இயக்குநர் செல்வராகவன் மற்றும் அவர் குடும்பத்தினரை அவருடைய வீட்டில் வைத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்துள்ளார்.
இதுதொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார் செல்வராகவன்.
When honourable C.M visited our family what a special meeting pic.twitter.com/kuLKoLD7k8
— selvaraghavan (@selvaraghavan) September 26, 2022