
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அக்டோபர் 4 அன்று மாமனிதன் படம் ஒளிபரப்பாகவுள்ளது.
யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் படத்தை இயக்கினார் சீனு ராமசாமி. தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் என சீனு ராமசாமி இயக்கிய மூன்று படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இருவரும் இணைந்த நான்காவது படமிது.
இளையராஜா - யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இப்படத்துக்கு இசையமைத்தார்கள். கடந்த ஜூன் 23 அன்று திரையரங்குகளிலும் அதன்பிறகு ஆஹா தமிழ் ஓடிடியிலும் படம் வெளியானது.
இந்நிலையில் அக்டோபர் 4 அன்று மதியம் 2 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மாமனிதன் படம் ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நெனச்சதொன்னு நடந்ததொன்னு..ஏ ராசா!!
— Zee Tamil (@ZeeTamil) September 29, 2022
Maamanithan | ஆயுத பூஜை Special | செவ்வாய் மதியம் 2 மணிக்கு#Maamanithan #VijaySethupathi #Gayathrie #GuruSomasundaram #AnikhaSurendran #WorldTelevisionPremiere #WTP #ZeeTamil #AayuthaPoojaSpecial #AayuthaPooja pic.twitter.com/AE4f7ttGba