உடல் எடையைக் குறைத்த நிவின் பாலி!

நடிகர் நிவின் பாலி உடல் எடையைக் கணிசமாகக் குறைத்துள்ளார்.
உடல் எடையைக் குறைத்த நிவின் பாலி!

நடிகர் நிவின் பாலி உடல் எடையைக் கணிசமாகக் குறைத்துள்ளார்.

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் நிவின் பாலி. ‘மலர்வாடி ஆர்ஸ் கிளப்’ படத்தின் மூலம் அறிமுகமான நிவின் முக்கிய கதாபாத்திரங்களிலும் நாயகனாகவும் நடித்து வருகிறார். குறிப்பாக, ’தட்டத்தின் மரையத்து’, ‘1983’, ‘நேரம்’ ஆகிய படங்கள் தொடர் வெற்றிபெற்றன.

அதன்பின், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் நாயகனாக நடித்தார். அப்படம் தென்னியந்திய அளவில் மிகப்பெரிய வெற்றிப்படமானது. அப்போது முதல் நிவின் பாலிக்கு ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது.

சில மாதங்களுக்கு முன் நிவின் பாலி அதீத எடையுடன் காணப்பட்டார். அதே உடலுடன் சில படங்களிலும் நடித்தார். ஆனால், அவை தோல்விப் படமாக அமைந்தன. இதனால், அவரின் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், இன்று இணையத்தில் நிவின் பாலியின் புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில், உடலைக் குறைத்து பழைய எடைக்கு திரும்பியுள்ளார். இதனால், அப்படத்தை அவருடைய ரசிகர்கள் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள்.

எடையைக் குறைத்த நிவின் பாலி!
எடையைக் குறைத்த நிவின் பாலி!

தற்போது, நிவின் பாலி இயக்குநர் ராம் இயக்கத்தில் ‘ஏழு கடல், ஏழு மலை’ படத்தில் நடித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com