
நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள அயலான் படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆா் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து 3 ஆண்டுகளான கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வந்தன. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கனடா எனப் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தில் அதிகளவிலான கிராபிக்ஸ் காட்சிகளும், 4,500-க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளும் கொண்ட இந்திய சினிமாவின் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தீபாவளி (நவ.12) அன்று அயலான் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தயாரிப்பாளர் ராஜேஷ், “ஏலியன் பொம்மைக்கு சீஜி மூலம் உணர்ச்சிகளை கொடுத்துள்ளோம். இதற்காக ரூ.2 கோடி செலவு செய்துள்ளோம். குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளோம். படத்தின் புரமோஷனுக்கு உபயோகிப்போம். வேறெந்த படத்திற்கும் அல்லாமல் இதற்கு 4500க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளை கொண்டு உருவாக்கியுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.