
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடித்த மாமன்னன் திரைப்படம் கடந்த மே - 29 திரையரங்குகளில் வெளியானது.
படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இப்படத்தில் வில்லனாக ரத்னவேலு கதாபாத்திரத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்திருந்தார். திரையரங்குகளில் இக்கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை.
ஆனால், ஓடிடியில் வெளியானதும் ஃபஹத் அதிக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். முக்கியமாக, படத்தில் ஆதிக்க சாதியாளராக நடித்த ஃபஹத்தின் காட்சித் துண்டுகளை, தங்கள் சாதியைக் குறிக்கும் பாடல்களுடன் இணைத்து பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
Last Edit
— yasARR Arafath (@yasarr_cuts) July 31, 2023
FAFA #FahadhFaasil #Maamannan #MaaveeranBlockBuster #MaamannanOnNetflix #Rathnavelu #Mariselvaraj #udayanithistalin #KeerthySuresh #ARRahman #Kodupotta #Raavanan pic.twitter.com/DMAtP1W7si
இதையும் படிக்க: சுப்ரமணியபுரம் புதிய டிரைலர் வெளியீடு
இதனைத் தொடர்ந்து, ஃபஹத் ஃபாசில் தன் முகநூல் பக்கத்தில் முகப்புப் படங்களில் ஒன்றாக ரத்னவேலு தோற்றப் புகைப்படத்தை பதிவேற்றினார். இதனால், உற்சாகமடைந்த ‘ரத்னவேலு’ ரசிகர்கள் கமெண்ட்களில் சாதிவெறியைத் தூண்டும் வகையிலான விடியோக்களையும் கருத்துக்களையும் பதிவிட்டனர்.
தற்போது, இந்தத் தொல்லைகளால் தான் பதிவேற்றிய படத்தை நீக்கியுள்ளார் ஃபஹத்!