
டிமான்டி காலனி - 2 படத்தின் முழு உரிமையையும் பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
திகில் கதையை மையமாக வைத்து கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிய இந்தத் திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார்.
விறுவிறுப்பான திரைக்கதை ஓட்டத்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படமானது வசூல்ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து, அருள்நிதி - பிரியா பவானி சங்கர் நடிப்பில் டிமான்டி காலனி - 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறையவடைந்து, தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தீபக் டி மேனன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.
இதையும் படிக்க: வெளியானது ஜெயிலர் டிரைலர்!
இந்த நிலையில், டிமான்டி காலனி - 2 படத்தின் முழு உரிமையையும் பாபி பாலச்சந்திரனின் பிடிஜி யுனிவர்சல்(BTG Universal) நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.