ஜெயிலர் படத்தின் முதல் நாள் முதல் காட்சியில் மாற்றம்: கொந்தளிக்கும் ரசிகர்கள்

ஜெயிலர் படத்தின் முதல் நாள் முதல் காட்சி தொடங்கும் நேரத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தால், ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
ஜெயிலர் படத்தின் முதல் நாள் முதல் காட்சியில் மாற்றம்: கொந்தளிக்கும் ரசிகர்கள்

ஜெயிலர் படத்தின் முதல் நாள் முதல் காட்சி தொடங்கும் நேரத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தால், ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

ஜெயிலர் படத்தின் முன்பதிவு நேற்று இரவு தொடங்கியது. முதல் நாள் முதல் காட்சி காலை 9 மணிக்குத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்ததால், காலை 4 மணி காட்சி இல்லாததால் ரசிகர்கள் ஏற்கனவே அதிருப்தியில் இருந்தனர்.

இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள திரையரங்குகளில் 6 மணி காட்சி இருந்ததால், தமிழகத்தில் உள்ள ரஜினி ரசிகர்கள், தங்களுக்கு முன்பே, கர்நாடக ரசிகர்கள் ரஜினி படத்தைப் பார்த்து விடுவார்களே என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட் விற்றுத் தீர்ந்துவிட்டன.

ஒரு சில திரையரங்குகளில் படம் ரிலீசாகும் வியாழக்கிழமை தவிர்த்து, வெள்ளி முதல் காலை 6 மணிக்கே ஜெயிலர் படம் திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு டிக்கெட்டுகள் விற்பனைக்கு வந்திருப்பது மேலும் ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது.

முதல் நாள் முதல் காட்சியை காலை 9 மணிக்கு வைத்துவிட்டு, அடுத்த நாள்களில் 6 மணிக் காட்சியை வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.

ஒரு திரைப்பட கதாநாயகனின் ரசிகர்கள் என்றாலே, அந்த நடிகரின் படம் வெளியாகும்போது முதல் நாள் முதல் காட்சியைப் பார்ப்பதில்தான் அவ்வளவு ஆனந்தம்.

கல்லூரி மாணவராக இருந்தாலும், அலுவலகம் செல்வோராக இருந்தாலும் காலை 4 மணிக் காட்சியை முன்பதிவு செய்துவிட்டு, முதல் ஆளாக படத்தைப் பார்த்து வெளியே வருவதைத்தான் விரும்பினார்கள்.

ஆனால், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் ஜெயிலர் படத்தை, தமிழக மக்கள் எல்லோருக்கும் முன்பு பார்த்துவிட முடியாது என்றுதான் தகவல்கள் மூலம் தெரிய வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய நடிகர்களின் படங்களின் முதல் நாள் முதல் காட்சி 4 மணிக்கு வெளியாகும். ஒரு சில படங்கள் நள்ளிரவு 1 மணிக்குக் கூட வெளியாகியிருக்கிறது.

ஆனால் இது சட்டப்படி சரியில்லையாம். தமிழகத்தில் திரையரங்குகள் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரைதான் இயங்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. வேண்டும் என்றால் இந்த நேரத்துக்குள் கூடுதல் காட்சிகளைக் கொண்டு வரலாமாம்.

இதற்கிடையே, துணிவு படம் நள்ளிரவு 1 மணிக்கு திரையிடப்பட்டபோது, கொண்டாட்டத்தில் ரசிகர் ஒருவர் உயிரிழந்தது பெரும் விமரிசனத்துக்கு உள்ளானது. இதனால், சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்குவதில் சிக்கல் எழுந்தது.

அதிலும், இந்த அதிகாலை 4 மணிக் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுகிறது.  அதாவது, அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. இதில் வரும் வருவாய் கணக்கில் காட்டப்படாததால், அரசுக்கு வரி இழப்பும் ஏற்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இதையெல்லாம் பற்றி ரசிகர்கள் கவலைப்படவில்லை. அவர்களது ஒரே கேள்வி ஜெயிலர் படம் முதல் காட்சி 4 மணிக்கு இல்லையே என்பது ஒன்றுதான்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com