ஜெயிலர் வெற்றி: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஷிவ ராஜ்குமார்!

ஜெயிலர் திரைப்படத்திற்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து விடியோ வெளியிட்டுள்ளார் நடிகர் ஷிவ ராஜ்குமார். 
ஜெயிலர் வெற்றி: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஷிவ ராஜ்குமார்!

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் விநாயகன், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார் மலையாள நடிகர் மோகன் லால் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

அதிகாலைக் காட்சிகள் எதுவும் இல்லையென்றாலும் தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்களால் இப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது.ஒட்டுமொத்தமாக உலகளவில் இப்படம் ரூ.95.78 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜெயிலர் படத்தில் ரஜினிக்குப் பிறகு ஷிவ ராஜ்குமாருக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. “யாரு இவரு? வந்த கொஞ்ச சீன்லயும் மாஸா இருக்காறே!.. தனியாக ஒரு படமே நடிக்கலாம்” என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த பாராட்டுக்கெல்லாம் நன்றி தெரிவிக்கும் விதமாக விடியோ வெளியிட்டுள்ளார் நடிகர் ஷிவ ராஜ்குமார். 

தான் வெளியிட்ட விடியோவில், “ஜெயிலர் நன்றாக ஓடிக்கொண்டுள்ளது. ரசிகர்களுக்கு மிக்க நன்றி. வாய்ப்பளித்த நெல்சன், ரஜினி சாருக்கும் நன்றிகள். உங்களின் அன்பினை எப்போதும் நெஞ்சில் வைத்திருப்பேன்” என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். 

இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது குறிப்ப்பிடத்தக்கது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com