
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றதுடன் ரூ.90 கோடி அளவில் வசூலிலும் கலக்கியது.
தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் 21வது படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். நாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார்.
ராணுவ வீரர் ஒருவரின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும், இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த 75 நாள்களாக காஷ்மீரில் நடைபெற்று வந்தது.
இதையும் படிக்க: வெளியானது ஜவான் டிரைலர்!
தற்போது, காஷ்மீர் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்க உள்ளது.