நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிக் பாஸ்: அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த நிக்சன்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனாவுக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக நிக்சன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :7 டிசம்பர் 2023, 7:27 am

DIN

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனாவுக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக நிக்சன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 10-வது வாரத்தை எட்டியுள்ளது. முதலில் 18 போட்டியாளர்களும், பின்னர் வைல்டுகார்டு போட்டியாளர்களாக 5 பேரும் பங்கேற்றனர்.

இவர்களில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் இருந்து இருவர் மீண்டும் வைல்டு கார்டாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். இதுவரை 12 பேர் பிக் பாஸைவிட்டு வெளியேறியுள்ளனர்.

இந்த நிலையில், இந்த வார தொடக்கத்தில் இருந்தே அர்ச்சனாவுக்கும் நிக்சனுக்கும் மோதல் போக்கு நிலவி வருகின்றது.

முதலில், சமைக்கும்போது அர்ச்சனா அருகில் நின்றால் கவனக்குறைவு ஏற்படுவதாகவும், அவரை சமையலறை பக்கம் வரவேண்டாம் என்றும் நிக்சன் கூறினார். இந்த வாக்குவாதம் மோதலில் முடிந்தது.

அடுத்து கல்லூரி டாஸ்கில் ஆசிரியர்களாக வந்த அர்ச்சனாவும், நிக்சனும் மாறிமாறி கருத்துகளை தெரிவித்ததால் இருவருக்கும் இடையேயான மோதல் அதிகரித்தது.

இந்த நிலையில், இன்று வெளியான முதல் ப்ரோமோவில் வினுஷா பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது அவரை நிக்‌ஷன் உருவக்கேலி செய்த சம்பவத்தை பற்றி அர்ச்சனா பேசியதால் நிக்சன் கோபமடைந்து ஒருமையில் பேசுகிறார்.

தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் ‘சொருகிருவேன்’ போன்ற கருத்துகளை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிக் பாஸில் தவறான கருத்துகளை பேசுவதாக பெண்களால் குற்றம்சாட்டப்பட்ட பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு கடந்த மாதம் வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில், ஏற்கெனவே போட்டியாளர் வினுஷா தேவியை உருவக்கேலி செய்து நிக்சன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய போதும், நிக்சனுக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

தற்போது பெண் போட்டியாளரை அவதூறாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய நிக்சனை நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசன் வெளியேற்றுவாரா? எச்சரிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.