ஆஸ்கர் போட்டியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஜார்கண்ட் சிறுமியின் ஆவணப்படம்!

ஆஸ்கர் இறுதிச்சுற்றுக்கு சிறந்த ஆவணப்படத்திற்கான பிரிவில் ஜார்கண்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி குறித்த ஆவணப்படம் தேர்வாகியுள்ளது.
ஆஸ்கர் போட்டியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஜார்கண்ட் சிறுமியின் ஆவணப்படம்!

2024 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழாவுக்கு உலகம் முழுவதுமிருந்து பல திரைப்படங்கள் விருதுக்காக போட்டியிடுகின்றன. தகுதிச்சுற்றில் கலந்துகொண்ட திரைப்படங்கள், 15  பிரிவுகளின் கீழ் அடுத்த சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

2024 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் போட்டியில் எந்தப் பிரிவிலும் இந்தியத் திரைப்படங்கள் தேர்வாகவில்லை. சிறந்த அயல்நாட்டு திரைப்படம் பிரிவில் மலையாளப் படமான 2018 தேர்வானது. ஆனால், தகுதிச் சுற்றுடன் வெளியேறியது. சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் தேர்வான ‘ஃபேஸ் ஆஃப் தி ஃபேஸ்லெஸ்’ திரைப்படமும் அடுத்த சுற்றுக்குத் தேர்வாகவில்லை. 

இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவருக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையையும் அதைத் தொடர்ந்து குற்றவாளிகளுக்கு எதிராக சிறுமியின் தந்தை நடத்திய சட்டப்போராட்டத்தையும் மையமாக வைத்து உருவான ’டூ கில் ஏ டைகர்’ என்கிற கனடா ஆவணப்படம் சிறந்த ஆவணப்பட பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

நிஷா பகுஜா தயாரிப்பு, இயக்கத்தில் உருவான இந்த ஆவணப்படம் பல்வேறு திரை விழாக்களில் பங்குபெற்ற மிகப்பெரிய கவனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com