மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

‘லியோ’ படப்பிடிப்பு தளத்திலிருந்து விஜய் நடிக்கும் காட்சி கசிவு!

லியோ படப்பிடிப்பு தளத்தில் விஜய் நடிக்கும் காட்சிகள் இணையத்தில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Published On :7 பிப்ரவரி 2024, 12:00 pm IST

லியோ படப்பிடிப்பு தளத்தில் விஜய் நடிக்கும் காட்சிகள் இணையத்தில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்தப் படத்தில் நடிக்க உள்ளவர்களின் விவரங்கள் வெளியாகி ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யுவ் தாமஸ், கெளதம் வாசுதேவ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. 

லியோ படக்குழுவினர் படப்பிடிப்பிற்காக தனிவிமானம் மூலம் நடிகர் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் காஷ்மீர் சென்ற விடியோவை தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், காஷ்மீரில் நடிகர் விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் அந்தக் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, படக்குழு தரப்பில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட விடியோவை பகிர்ந்தால் முன்னறிவிப்பின்றி நீக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லியோ படத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.