சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ரோஜா' தொடர் புகழ் பிரியங்கா நல்காரி நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள 'சீதா ராமன்' தொடர் ஒளிபரப்பாகும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ரோஜா' தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. இந்தத் தொடரில் பிரியங்கா நல்கார் - சிபு சூர்யன் ஆகியோர் 'ரோஜா' - அர்ஜுன் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த தொடர் குடும்ப ரசிகர்களையும் தாண்டி இளைஞர்கள் மத்தியிலும் பெரிதாகப் பேசப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிரியங்கா நல்காரி தற்போது ஜீ தமிழின் புதிய தொடரில் ஒப்பந்தமாகியுள்ளார். 'சீதா ராமன்' எனப் பெரியரிடப்பட்டுள்ள அந்தத் தொடரின் முன்னோட்ட விடியோ கடந்த வாரம் வெளியானது.
இந்தத் தொடரின் கதாநாயகியாக பிரியங்கா நடிக்கிறார். திருமணமாகி செல்லும் நாயகி, அழகை காரணம் காட்டி முதல் நாளிலேயே புகுந்தவீட்டிலிருந்து வெளியேற்றப்படுவதைப் போன்று முன்னோட்ட விடியோ வெளியாகியிருந்தது.

எனினும் ஒளிபரப்பாகும் நேரம் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது 'சீதா ராமன்' தொடர் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என ஜீ தமிழ் அறிவித்துள்ளது.
இந்த நேரத்தில் நினைத்தாலே இனிக்கும் தொடர் ஒளிபரப்பாகிவந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்பட 21 மாவட்டங்களில் மழை!

எதிரியும் எதிரியும் எப்படி நண்பன்? தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது! - ஜோதிமணி

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy

இது மக்கள் உத்தரவு! முதுகில் குத்த முடியாது: காங்கிரஸ்
வீடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை


