கொதித்தெழுந்த அஷீம்: ‘டிக்கெட் டூ ஃபைனல்’ கைப்பற்றப்போவது யார்?

பிக் பாஸ் இறுதிப் போட்டிக்கு நேரடியாக நுழைவதற்கான டிக்கெட் டூ ஃபைனல் டாஸ்க் பரபரப்பை எட்டியுள்ளது.
கொதித்தெழுந்த அஷீம்: ‘டிக்கெட் டூ ஃபைனல்’ கைப்பற்றப்போவது யார்?

பிக் பாஸ் இறுதிப் போட்டிக்கு நேரடியாக நுழைவதற்கான டிக்கெட் டூ ஃபைனல் டாஸ்க் பரபரப்பை எட்டியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 போட்டி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, விக்ரமன், ஆயிஷா, அமுதவாணன், பாடகர் ஏடிகே, மைனா நந்தினி, ஜனனி, அஷீம், தனலட்சுமி, கதிரவன், மகேஸ்வரி, மணிகண்டா, குயின்ஸி, ராம், சிவின், நிவாசினி, செரினா, அசல், சாந்தி, ஜி.பி.முத்து உள்ளிட்ட 21 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். கொண்டுள்ளனர். இந்த போட்டியை நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 6வது முறையாக தொகுத்து வழங்கி வருகிறார்.

இதுவரை சாந்தி, அசல், செரினா, மகேஸ்வரி, நிவாசினி, ராபர்ட், குயின்ஸி, ராம், ஜனனி, ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி, மணிகண்டா ஆகியோர் நானிமேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜி.பி. முத்து தனிப்பட்ட காரணங்களால் தானாகவே போட்டியைவிட்டு விலகினார்.

இந்நிலையில், இந்த வாரம் ‘டிக்கெட் டூ ஃபைனல்’ டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. பல டாஸ்க்குகள் வழங்கப்பட்டு, அதில் அதிக புள்ளிகள் பெறுபவர்கள் இரண்டு வார எவிக்‌ஷனை கடந்து நேரடியாக இறுதி வாரத்திற்கு முன்னேறுவார்கள்.

கடந்த 3 நாள்களில் 5 டாஸ்க்குகள் நிறைவடைந்த நிலையில், அமுதவாணன், ஏடிகே, கதிரவன் புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் உள்ளனர்.

ஆறாவதாக நேற்று சைக்கிள் டாஸ்க் வழங்கப்பட்டது. இரண்டு சைக்களில் மூவரும், ஒரு சைக்களில் இருவரும் அமர வேண்டும். ஒவ்வொருவராக மாறி மாறி பெடல் செய்து இறுதியில் யார் அதிக நேரம் பெடல் செய்துள்ளார்களோ அவர் வெற்றியாளர். பெடல் செய்பவர்கள் இடம்மாறும் போது 10 வினாடிகளுக்குள் மாறவில்லை என்றால் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பது விதிமுறை.

இதில், அஷீம் மற்றும் விக்ரமன் இருவரும் இரண்டு பேர் அமரும் சைக்களில் அமர்ந்து பெடல் செய்யத் தொடங்கினர். மற்ற அனைவரும் மூன்று பேர் அமரும் சைக்களில் மாறி மாறி ஓட்டினர். இதன் விளைவாக விக்ரமனும், அஷீமும் முன்னிலை பெற்றனர்.

இதை அறிந்த சிவின், விக்ரமன் மற்றும் அஷீமை மூவர் அமரும் சைக்கிளுக்கு வரும்படி கூறினார். இருவர் சைக்கிளுக்கு சிவின், ரச்சிதா வந்தனர்.

மூவர் அமரும் சைக்களில் இடம்மாறும் போது 10 வினாடிகளை தாண்டியதால் அஷீம் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதையடுத்து கோபமடைந்த அஷீம், இரண்டு பேரும் அமரும் சைக்கிளில் அமர்ந்திருந்தால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். எல்லாம் உன்னால்தான் வந்தது. அடுத்த டாஸ்க்கிள் உன்னையும், ரச்சிதாவையும் வச்சு செய்யுறேன் என சிவினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இன்றைய ப்ரோமோவிலும், அஷீம் - சிவின் இடையேயான வாக்குவாதம் தொடர்ந்து கொண்டே போகிறது.

டிக்கெட் டூ ஃபைனல் டாஸ்க் நிறைவடைய இன்னும் சில சுற்றுகளே உள்ள நிலையில் வெற்றியாளரை காண ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com