
குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான மாஸ்டர் மகேந்திரன் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய், விஜய் சேதிபதி நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம்தான் மிகப்பெரிய வரவேற்பினை கொடுத்தது.
தற்போது இவரது பிறந்தநாளை முன்னிட்டு ‘ரிப்பப்பரி’ எனும் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தினை ‘சூப்பர் டீப்பர்’ எனும் படத்தை இயக்கிய அருண் கார்த்திக் தயாரித்து இயக்குகிறார். இந்தப் படத்துக்கு இசை திவாகர தியாகராஜன்.
இந்தப் படத்தில் சீரிய்ல நடிகியும் இன்ஸ்டாகிராம் பிரபலமான காவ்யா அறிவுமணி ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் முதல்பாடல் ‘ஆக்கு பாக்கு’ வெளியாகியுள்ளது. இதில் வரும் ‘தம்பி இது தமிழ்நாடு’ எனும் வசனம் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
படத்தின் இயக்குநர், “சமூகநீதி என்பது சலுகை அல்ல... சத்தியம்” என தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் பாடலை பகிர்ந்துள்ளார்.