
தோனியும் அவருடைய மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து தோனி என்டர்டெய்ன்மெண்ட் என்கிற படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி உள்ளார்கள். இதற்கு முன்பாக ‘ரோர் ஆஃப் தி லயன்’ என்கிற சிஎஸ்கே பற்றிய ஆவணப்படத்தையும் ‘வுமன்ஸ் டே அவுட்’ என்கிற குறும்படத்தையும் தயாரித்துள்ளார்கள்.
இதையும் படிக்க: ஒவ்வொரு தொழிலாளியும் முதலாளியும் பார்க்க வேண்டிய படம் அநீதி... : இயக்குநர் ஷங்கர் புகழாரம்!
சிஎஸ்கே அணியின் கேப்டனாக உள்ள தோனி மீது தமிழ் ரசிகர்கள் அதிக அளவிலான அன்பைச் செலுத்தி வருகிறார்கள். இதற்கு நன்றி செலுத்தும் விதமாக தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் முதல் படத்தைத் தமிழில் தயாரிக்க முடிவு செய்திருந்தனர் தோனியும் சாக்ஷியும்.
இதையும் படிக்க: சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை ரத்து செய்து மீண்டும் விளையாடியவர்கள்!
ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ‘எல்ஜிஎம்’ (லெட்ஸ் கெட் மேரிட்) என்கிற படத்தின் அறிவிப்பு வெளியானது. தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், இவனா, நதியா, வினோதினி, யோகி பாபு போன்றோர் நடித்துள்ளனர்.
ஏற்கனவே, படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில், படத்தின் இசை மற்றும் டிரைலரை தோனியும் தோனியின் மனைவி சாக்ஷியும் சேர்ந்து ஜூலை 10ஆம் நாள் வெளியிட உள்ளார்கள்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...