பிரபல கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் நடித்த போட்டா போட்டி படத்தினை இயககியவர் யுவராஜ் தயாளன். பின்னர் வடிவேலு நடித்த தெனாலிராமன், எலி ஆகிய படங்களை இயக்கி மக்களிடையே கவனம் பெற்ற யுவ்ராஜ் தயாளன் தற்போது அவருக்கு வித்தியாசமான கதைக்களத்தில் படத்தினை இயக்கியுள்ளார்.
இதையும் படிக்க: அமேசானில் முதலிடம் பிடித்த ஐஸ்வர்யா மேனனின் ஸ்பை!
நடிகர்கள் விக்ரம் பிரபு, மாநகரம் புகழ் ஸ்ரீ, விதார்த் ஆகியோர் நாயகர்களாகவும் நடிகைகள் ஷரத்தா ஸ்ரீநாத், அபர்ணா நதி, சானிய ஐயப்பான் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இந்த 3 ஜோடிகளின் காதல் கதையை படமாக எடுத்துள்ளார் இயக்குநர் யுவராஜ் தயாளன்.
நடிகர் விக்ரம் பிரபுவின் பொன்னியி செல்வன், பாயும் ஒளி நீ எனக்கு படங்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடயே நல்ல கவனம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் வித்தார்த் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே நடித்து வருகிறார். வழக்கு என் 18/9 இல் அறிமுகமாகி லோகேஷின் மாநகரம் படத்தில் நடித்த ஸ்ரீ பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடித்துள்ள படமாக இறுகப்பற்று படம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கஜோலுக்கு நன்றி கூறிய ரன்வீர் சிங்! காரணம் என்ன?
எஸ் ஆர்பிரபு, எஸ் ஆர் பிரகாஷ் பாபு, பி கோபிநாத், தங்கபிரபாகரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்தப்படத்தினை பொடென்சியல் ஸ்டூடியோஸ் எல்எல்பி வழங்குகிறது. இந்தப்படத்திற்கு ஜஸ்டின் பிராபகரன் இசையமைத்துள்ளார். கார்த்திக் நேதா பாடல்கள் எழுதியுள்ளார்.
விரைவில் படத்தின் டிரைலர், ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.