
நாக சைதன்யா நடிப்பில் உருவான கஸ்டடி திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு.
தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் நாக சைதன்யா. இவர் நடிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவான திரைப்படம் கஸ்டடி.
ரூ.40 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் கடந்த மே 12 ஆம் தேதி வெளியானது.
இப்படம் உலகம் முழுவதும் சேர்த்து ரூ.20 கோடியைக் கூட வசூலிக்கவில்லை.
இதையும் படிக்க: மும்பை தாதாவாக மொய்தீன் பாய்!
மாநாடு படத்தின் வெற்றிக்குப் பின் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய ‘மன்மதலீலை’, ‘கஸ்டடி’ ஆகிய இரண்டு படங்களும் தோல்வி அடைந்துள்ளன. அடுத்ததாக வெங்கட் பிரபு நடிகர் விஜய்யை இயக்கவுள்ளார்.
இந்நிலையில், கஸ்டடி படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நாளை மறுநாள்(ஜூன் - 9) வெளியாகவுள்ளது.
embark on a heart-pounding journey with constable Siva as he works his way through a web of corruption, betrayal, and lies! #CustodyOnPrime, June 9 pic.twitter.com/oosDXGXjE8
— prime video IN (@PrimeVideoIN) June 7, 2023
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...