
மாதவன் - கங்கனா ரணாவத் இணைந்து நடிக்கும் தமிழ் படத்தை தான் இயக்கவில்லை என இயக்குநர் மந்திரமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழில் ‘தாம் தூம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கங்கனா ரணாவத். பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் இவர் தமிழில் ‘சந்திரமுகி - 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் மாதவன் நடிக்கும் புதிய தமிழ் படத்தில் அவருக்கு ஜோடியாக கங்கனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும், அப்படத்தை அயோத்தி படத்தை இயக்கிய மந்திர மூர்த்தி இயக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க: கருப்போ, வெள்ளையோ பணத்திற்காக சினிமாவிற்கு வரவில்லை: ஷ்ரேயா ரெட்டி
இந்நிலையில், மாதவன் - கங்கனா ரணாவத் இணைந்து நடிக்கும் தமிழ் படத்தை தான் இயக்கவில்லை என இயக்குநர் மந்திரமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
Hi everyone,
— Manthira Moorthy (@dir_Mmoorthy) June 6, 2023
My next project is also @Tridentartsoffc
But im not directing the project starring kangana Ranaut.
Very soon we will announce our next project
Thank you
முன்னதாக மாதவன் - கங்கனா இருவரும் ’தனு வெட்ஸ் மனு’ என்கிற பாலிவுட் படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...