கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தனுஷ் - ஜூனியர் என்.டி.ஆர். - வெற்றிமாறன் கூட்டணியில் புதிய படம்?

இயக்குநர் வெற்றிமாறனின் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :8 மார்ச் 2023, 8:03 am

இயக்குநர் வெற்றிமாறனின் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

'அசுரன்’ திரைப்படத்திற்குப் பின் இயக்குநர் வெற்றிமாறன் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து ‘விடுதலை’ என்கிற தலைப்பில் புதிய படத்தை இயக்கி வந்தார். 

இப்படத்தில் நடிகர் சூரி நாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், பீட்டர் ஹெய்ன் சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளனர்.   

இரண்டு பாகங்களாக வெளியாகும் விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.

இப்படத்திற்குப் பின் வெற்றிமாறன் வாடிவாசல் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர்கள் தனுஷ் - ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து வெற்றிமாறன் புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்தான அறிவிப்பு இன்று மாலை நடைபெறும் விடுதலை டிரைலர் வெளியீட்டு விழாவில் அறிவிக்கப்படும் என்றும் தகவல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.