‘அசுரன்’ திரைப்படத்திற்கு பின் இயக்குநர் வெற்றிமாறன் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து ‘விடுதலை’ என்கிற தலைப்பில் புதிய படத்தை இயக்கி வந்தார்.
இப்படத்தில் நடிகர் சூரி நாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், பீட்டர் ஹெய்ன் சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
இரண்டு பாகங்களாக வெளியாகும் விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் மார்ச் 8ஆம் தேதி வெளியானது. இதுவரை ஒரு கோடி பார்வையாளர்களை கடந்து நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
இந்நிலையில் மீண்டும் சில காட்சிகளை படமாக்க வெற்றி மாறன் முடிவெடித்துள்ளார். ஹிந்தி படப்பிடிப்பின்போது காயமடைந்த சுதா தற்போது ஓய்வெடுத்து வருகிறார். இந்தப் படப்பிடிப்பில் வெற்றிமாறன் உடன் இயக்குநர் சுதா கொங்கோரா சந்தித்து பேசியுள்ளார்.
இந்த படங்கள் இணையத்தில் வைரலானது. இந்த படங்களை பகிர்ந்த இயக்குநர் சுதா கொங்கோரா தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது இருண்ட இடைவெளியில் விடுதலைஒ படப்பிடிப்பு. எனது நண்பர் வெற்றிமாறன் இதுதான் கடைசிநாள் படப்பிடிப்பென கூறினார்” எனப் பதிவிட்டுள்ளார்.
இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.