
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளி வெளியீடாக கடந்த நவ.10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இதில், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, இளவரசு, நிமிஷா சஜயன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
சினிமாவில் நடிக்க ஆசைப்படும் கேங்க்ஸ்டர் சீசரும் (ராகவா லாரன்ஸ்) இயக்குநராக அறிமுகமாகும் கிருபாவும் (எஸ்.ஜே.சூர்யா) எதிர்கொள்ளும் பிரச்னைகளாக உருவாகியிருக்கிறது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.
இதையும் படிக்க: ஏமாற்றி வெல்லும் ஹீரோக்கள்! கார்த்திக் சுப்புராஜின் தந்திரம்?
இப்படம் வெளியான 4 நாள்களில் உலகளவில் ரூ.35 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் படம் குறித்து கடிதம் வாயிலாகத் தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அதில், “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு. லாரன்ஸால் இப்படியும் நடிக்க முடியுமா? என பிரம்மிப்பை நமக்கு உண்டாக்குகிறது. எஸ்.ஜே.சூர்யா இந்நாளின் திரை உலக நடிகவேள். வில்லத்தனம், நகைச்சுவை, குணச்சித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தியிருக்கிறார்.” எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்தை நேரில் சென்று சந்தித்த ஜிகர்தண்டா படக்குழுவினர் அவரிடம் வாழ்த்துகளைப் பெற்று புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். எஸ்.ஜே.சூர்யா இதுகுறித்து தன் எக்ஸ் பக்கத்தில், “தலைவருடனான குறிஞ்சி கணங்கள். உங்கள் கடிதம் மூலம் நாங்கள் நெகிழ்ச்சியானோம். மிக்க நன்றி சார்” எனப் பதிவிட்டுள்ளார்.
“#JigarthandaXX Oru Kurinji Malar- statement from Thalaivar” & Kurinji Moments with Thalaivar Super Star @rajinikanth sir we are overwhelmed with Ur lovely letter abt #JigarthandaXX Thank you sirrrrrr sjs pic.twitter.com/06gQQeylYJ
— S J Suryah (@iam_SJSuryah) November 15, 2023
இதையும் படிக்க: தனிமனித தாக்குதல் விமர்சனமாகாது: டோவினோ தாமஸ் காட்டம்!
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...