பார்க்கிங் படத்தின் முதல் பாடல் எப்போது?

ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் படத்தின் முதல் பாடல் நாளை (அக்.27) வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Published On :2 பிப்ரவரி 2024, 8:43 am IST

ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் படத்தின் முதல் பாடல் நாளை (அக்.27) வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

பிக் பாஸ் முதல் பருவத்தில் கலந்துகொண்டு புகழ் பெற்றவர் ஹரிஷ் கல்யாண். 2018-ல் பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகனாக நடித்தார். இதன்பிறகு பல படங்களில் கதாநாயகனாக நடித்து ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். 

தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ‘எல்ஜிஎம்’(லெட்ஸ் கெட் மேரிட்) படம் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது

ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள புதிய படத்தின் பெயர் 'பார்க்கிங்'.  இப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு தெரிவித்து இருந்த நிலையில், புதிய வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில், பார்க்கிங் படத்தின் முதல் பாடலான செல்லக் கள்ளியே பாடல் நாளை(அக்.27) காலை 11 மணிக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.